/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை - மன்னார்குடி ரயில் இயக்க வேண்டும் பா.ஜ., வினர் கோரிக்கை
/
மானாமதுரை - மன்னார்குடி ரயில் இயக்க வேண்டும் பா.ஜ., வினர் கோரிக்கை
மானாமதுரை - மன்னார்குடி ரயில் இயக்க வேண்டும் பா.ஜ., வினர் கோரிக்கை
மானாமதுரை - மன்னார்குடி ரயில் இயக்க வேண்டும் பா.ஜ., வினர் கோரிக்கை
ADDED : மார் 04, 2024 05:30 AM
மானாமதுரை: மானாமதுரை -- மன்னார்குடி இடையே ஓடிய ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பா.ஜ.,வினர், மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மானாமதுரையிலிருந்து மன்னார்குடி வரை தினமும் பயணிகள் ரயில் பகல் நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயிலினால் மானாமதுரை மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பயணிகள் பயனடைந்து வந்தனர்.
மானாமதுரையில் மதியம் 2:00 மணிக்கு புறப்படும் இந்த மன்னார்குடி ரயிலை, நிறுத்தியதால், பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து மானாமதுரை மக்களிடம் கருத்து கேட்டுள்ளேன். இது குறித்து மத்திய அமைச்சர் முருகன் வழியாக கோரிக்கை வைத்துள்ளேன். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார், என்றார்.