/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
/
மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
ADDED : ஆக 21, 2025 08:23 AM

மானாமதுரை: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியேறும் பகுதியில் நீண்ட காலமாக தோண்டப்பட்டு மூடாமல் விடப்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, பரமக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், மானாமதுரை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் 200க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன.4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
புது பஸ் ஸ்டாண்டின் முகப்பு பகுதியில் அலங்கார வளைவு ஏற்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு துாண்கள் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டு விட்டதால் இரவு நேரத்தில் பலர் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
பள்ளத்தை மூட பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை பள்ளத்தை மூடாமல் உள்ளனர்.