/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
என்.புதுாரில் இன்று மஞ்சுவிரட்டு
/
என்.புதுாரில் இன்று மஞ்சுவிரட்டு
ADDED : மார் 08, 2024 12:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் என்.புதுாரில் வெள்ளாலங்கருப்பர் கோயில், சித்துாரணி மஞ்சுவிரட்டு இன்று நடைபெறுகிறது.
மாவட்டத்தில் அனுமதி பெற்று நடத்தப்படும் மஞ்சுவிரட்டுகளில் இதுவும் ஒன்று இந்த மஞ்சு விரட்டை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு தடுப்பு, காளைகள் விரட்ட வாடிவாசல், மருத்துவ முகாம் போன்ற ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
இன்று காலை சிறப்பு வழிபாடு முடிந்து, காலை 10:00 மணி அளவில் மஞ்சுவிரட்டு துவங்கும். பல மாவட்டங்களிலிருந்து நுாற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்கின்றன.
இன்று சிவராத்திரி என்பதால் கிராமத்தினர் அசைவ உணவுக்கு பதிலாக சைவ விருந்திற்கு விருந்தினர்களை அழைத்துள்ளனர்.

