
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே லட்சுமிபுரம் இல்லமுத்துமாரியம்மன், பாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தயிர், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். உலக நன்மை, விவசாயம் செழிக்க கோயில் முன் திருவிளக்கு பூஜை நடந்தது. கிராம மக்கள் விழா ஏற்பாட்டைசெய்திருந்தனர்.