நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார், : திருப்புத்துார் ஒன்றியம் மாங்குடி கொந்தலையம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.
இக்கோயிலில் திருப்பணி நடந்து நவ.19ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு மண்டல பூஜை நடந்தது. நேற்று மண்டலாபிேஷக நிறைவை முன்னிட்டு காலையில் யாகசாலை பூஜை நடந்து பூர்ணாகுதிக்கு பின்னர் கலசங்கள் புறப்பாடானது.
சிவாச்சாரியார்கள் கலசத்துடன் கோயிலை வலம் வந்து மூலவர் சன்னதி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு புனித நீரால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், அம்மனுக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. பரியாமருதிபட்டி பிரசன்னா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை செய்தனர்.