/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லல் அருகே மஞ்சுவிரட்டு; பொங்கலிட்டு ஆண்கள் வழிபாடு
/
கல்லல் அருகே மஞ்சுவிரட்டு; பொங்கலிட்டு ஆண்கள் வழிபாடு
கல்லல் அருகே மஞ்சுவிரட்டு; பொங்கலிட்டு ஆண்கள் வழிபாடு
கல்லல் அருகே மஞ்சுவிரட்டு; பொங்கலிட்டு ஆண்கள் வழிபாடு
ADDED : பிப் 05, 2025 10:07 PM

காரைக்குடி; கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவபட்டு கிராமத்தில், ஆண்டுதோறும் அந்தரநாச்சியம்மனுக்கு செவ்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெறும். நேற்று பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடந்தது. முன்னதாக பாரம்பரிய முறைப்படி ஆண்கள் ஆற்றில் நீர் எடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மாலையில் நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 20க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.