sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆயிரம் கிளிகளுக்கு தினம் உணவு அளிக்கும் மெக்கானிக் கீ...கீ... சத்தத்துடன் கிளிகள் குதுாகலம்

/

ஆயிரம் கிளிகளுக்கு தினம் உணவு அளிக்கும் மெக்கானிக் கீ...கீ... சத்தத்துடன் கிளிகள் குதுாகலம்

ஆயிரம் கிளிகளுக்கு தினம் உணவு அளிக்கும் மெக்கானிக் கீ...கீ... சத்தத்துடன் கிளிகள் குதுாகலம்

ஆயிரம் கிளிகளுக்கு தினம் உணவு அளிக்கும் மெக்கானிக் கீ...கீ... சத்தத்துடன் கிளிகள் குதுாகலம்

2


ADDED : நவ 29, 2024 02:48 AM

Google News

ADDED : நவ 29, 2024 02:48 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மெக்கானிக் முனியாண்டி 56, தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு அரிசி, பழம், மக்காச்சோளத்தை உணவாக அளிக்கிறார்.

சிவகங்கை அருகே பையூரைச் சேர்ந்த இவர் விவசாய மின் மோட்டார் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பையூர் அருகே ஏற்கனவே அதிகளவில் இருந்த பனை மரங்களில் கிளிகள் வளர்ந்தன.

காலப்போக்கில் பனை மரங்களை வெட்டிவிட்டனர். கிளிகள் தங்குமிடமின்றி தவித்தன. 18 ஆண்டுக்கு முன்பே பையூர் சந்தனத்தேவர் கண்மாய் கரையில் ஆலமரம் நட்டு வைத்தார். இம்மரத்தில் கிளிகள் தங்க துவங்கின.

கிளிகள் தங்க மரம் வளர்த்த முனியாண்டி சில மாதங்களாக அவற்றிற்கு உணவு அளிக்க விரும்பினார்.

ஆலமரத்தை சுற்றி பலகை அமைத்து அதில் அரிசி, பழங்கள், மக்காச்சோளத்தை வைத்து கிளிகளுக்கு வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் தினமும் 50 முதல் 100 கிளிகள் மட்டுமே வந்தன.

தற்போது தினமும் இங்கு வரும் கிளிகளின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்து விட்டது. இதனால், காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை பையூர் கண்மாயை கடந்து செல்வோருக்கு 'கீ... கீ...' என பச்சை கிளிகளின் சப்தம் அதிகளவில் கேட்டு வருகின்றன.

தினமும் 1000 கிளிகளுக்கு சாப்பாடு


முனியாண்டி கூறியதாவது: தினமும் அதிகாலை 5:45 மணிக்கு பையூர் கண்மாய் கரையில் உள்ள ஆலமரத்திற்கு வந்து 'விசில்' அடிப்பேன். இது கிளிகளுக்கு நான் தரும் சிக்னல்.

'விசில்' அடித்த சில நொடிகளில் நுாற்றுக்கணக்கான கிளிகள் பறந்து வந்து, நான் வைத்த பலகையில் அமர்ந்து உணவை எடுக்கும்.

பறவைக்கு மனிதர்களை உணரும் சக்தியும், பாசமும் உண்டு. ஆரம்பத்தில் என்னிடம் நெருங்க அஞ்சிய கிளிகள், இன்றைக்கு நான் 'சிக்னல்' கொடுத்ததும் பறந்து வந்து நான் தரும் உணவை சாப்பிட்டு செல்லும். மெக்கானிக் பணி மூலம் கிடைக்கும் வருவாயில் தான் இச்சேவையை செய்கிறேன். இது எனக்கு முழு மன திருப்தி, ஆனந்தம் தருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us