ADDED : அக் 08, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : சென்னையில் நடந்த மாநில முதல்வர் கோப்பை சிலம்ப போட்டியில் மானாமதுரை அரசு பள்ளி பிளஸ் 1 மாணவி ஜெயஸ்ரீ தங்கப் பதக்கம் பெற்றார்.
மானாமதுரை வீர விதை சிலம்ப அகாடமியில் பயிற்சி பெற்ற இவர் சென்னை தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் நடந்த முதல்வர் கோப்பைக்கான சிலம்பப் போட்டியில் 60லிருந்து 70கிலோ வரையிலான தொடு முறை எடைப்பிரிவில் ஜெய ஸ்ரீ தங்கப் பதக்கத்தையும், ஊக்கத்தொகை ரூ.1 லட்சம் பெற்றார். பயிற்சியாளர் பெருமாள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாராட்டி பரிசு வழங்கினர்.