/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டரமாணிக்கத்தில் மருத்துவ முகாம்
/
கண்டரமாணிக்கத்தில் மருத்துவ முகாம்
ADDED : டிச 28, 2025 05:33 AM
திருப்புத்துார்: கண்டரமாணிக்கம் சேதுஐராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் எம்.பி. முன்னிலை வகித்தார். முகாமை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்,பஸ் பயண அட்டைகள், அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்பட்டன. இணை இயக்குநர்(மருத்துவப் பணி) அருள்தாஸ், மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், சேது பாஸ்கரா கல்வி குழுமத் தலைவர் சேதுகுமணன்,தாசில்தார் மாணிக்கவாசகம், வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

