ADDED : ஜூலை 02, 2025 07:27 AM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை தின விழாவை முன்னிட்டு அலுவலர், ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த விழாவிற்காக மானகிரி அப்பல்லோ மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
முகாமை கலெக்டர் கே.பொற்கொடி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன், சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன், மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட வருவாய்துறையை சேர்ந்த தாசில்தார்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
முகாமில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர், ஊழியர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.