/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதியவர்களிடம் அதிகரிக்கும் நரம்பியல் பிரச்னை
/
முதியவர்களிடம் அதிகரிக்கும் நரம்பியல் பிரச்னை
ADDED : ஜூன் 30, 2025 06:09 AM
காரைக்குடி இசை நியூரோ கேர் கிளினிக், நரம்பியல் நோய்களுக்கு பிரத்யோகமான ஆலோசனைகளையும் சிகிச்சை முறைகளையும் வழங்கி வருகிறது. நரம்பியல் நோய்களுக்கான சிறந்த மதிப்பீடு மற்றும் நவீன சிகிச்சைகளை மருத்துவமனை வழங்குகிறது. நோயாளிகளின் தேவைக்கேற்ப தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள் வழங்கப்படுகிறது.
வயதானவர்களிடையே இயலாமை மற்றும் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பக்கவாதம் உள்ளது. பக்கவாதம் பெரும்பாலும் நீண்டகால பலவீனம், பேச்சு மற்றும் நினைவாற்றல் குறைபாடுகளுக்கு வழி வகுக்கிறது. இந்த நோய், பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி பராமரிப்பாளர்களுக்கும் பெரும் பாரமாக இருக்கிறது. பார்கின்சன் நோய் முதியவர்களுக்கு அதிகரித்து வருகிறது. இயக்க திறனை குறைத்து சுய நிலையை பாதிக்கிறது. இந்த நோய் நாளுக்கு நாள் தீவிரம் அடையும் தன்மை உடையது. இதற்கு துரிதமான கண்டறிதலும் சரியான சிகிச்சை முறையும் முக்கியம். நீண்ட காலம் நீரிழிவு நோயுடன் வாழும் முதியவர்களிடம் டயாபெட்டிக் நியூரோபதி பொதுவாக காணப்படுகிறது. பாத எரிச்சல், மரத்துப்போகும் தன்மை தள்ளாட்டம் மற்றும் கீழே விழும் அபாயத்தை அதிகரிக்கிறது. இளம் வயதினரும் தங்களுக்கே உரிய நரம்பியல் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தலைவலி நோய்கள் வேலை செய்யும் வயதினரிடையே பரவலாக உள்ளன. மைக்ரேன் என்று அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலியும் டென்ஷன் வகை தலைவலியும் உற்பத்திதிறன் மற்றும் தினசரி செயலை பாதிக்கிறது. தலைசுற்றல் இளம் வயது மற்றும் நடுத்தர வயதினிடையே மற்றொரு பொதுவான அறிகுறியாகவும். நீண்ட நேரம் திரை முன்பு இருப்பதும், தவறாக உட்காரும் நிலையும் கழுத்து வலிக்கு வழி வகுக்கின்றன.
டாக்டர். நாகேஸ்வரன்,
காரைக்குடி. 9514 121217.
////