ADDED : பிப் 09, 2025 05:02 AM
சிவகங்கை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் மருத்துவ மூலிகை சாகுபடி, வணிகமயமாக்கல்,விவசாயிகள் நலன் குறித்து தேசிய கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு தேசிய மூலிகை தோட்ட வாரிய துணை ஆலோசகர் பேராசிரியர் ஆர்.முருகேஸ்வரன் தலைமை வகித்தார்.யோகா அறக்கட்டளை நிறுவனர் வி.கே., யோகநாதன் கருத்தரங்கை நடத்தினார். பேராசிரியர் ஜெயந்தி நிர்மலா, பாக்கியலட்சுமி, நீனாஜோராயன் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் மூலிகைகள், விவசாயிகள் நல வாழ்வு பற்றி விளக்க உரை ஆற்றினர்.
கருத்தரங்கில், இந்தியாவில் உள்ள மருத்துவ மூலிகை, சாகுபடி முறை, பயன்பாடு குறித்த புத்தகத்தை பேராசிரியர் ஆர்.முருகேசன் வெளியிட்டார். 2ம் நாள் கருத்தரங்கில் சென்னை ராமசந்திரா உயர்கல்வி மற்றும்ஆராய்ச்சி நிறுவன இணை பேராசிரியர் ராமன் லட்சுமிசுந்தரம் எழுதிய நுால் குறித்து விளக்கம் அளித்தார்.
நிறைவு விழாவில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலைச்சாமி நிறைவுரை ஆற்றினார்.