/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்ப உற்ஸவம்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்ப உற்ஸவம்
ADDED : மே 13, 2025 06:51 AM

தேவகோட்டை : தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயிலில் சித்திரை பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு தெப்ப உற்ஸவம் நடைபெற்றது.
இக்கோயிலில் மே 1ல் கொடியேற்றம், காப்பு கட்டுடன் விழா துவங்கியது. தினமும் சுந்தரேஸ்வரர், மீனாட்சி, விநாயகர் முருகன், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாளுடன் வீதிஉலா வந்தார்.
விழாவின் 5 ம் நாளில் திருக்கல்யாணம், 9ம் நாளில் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். தெப்பம் மூன்று முறை வலம் வந்தது.
நிறைவு நாளை முன்னிட்டு ருத்ர அபிேஷகம், தாரா ேஹாமம், மாலை அம்பாள் ஊஞ்சல் உற்ஸவத்தில் காட்சி அளித்தார்.