ADDED : நவ 13, 2024 09:25 PM
முதியவர் தற்கொலை
மானாமதுரை: பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கருப்பையா மகன் பாலு 74, இவர் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு அருகே உள்ள கோயிலில் தங்கியிருந்த நிலையில் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மோதி முதியவர் பலி
சாலைக்கிராமம்: இளையான்குடி அருகே உள்ள அளவிடங்கான் கீழக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒய்யப்பன் மகன் முத்துச்சாமி 70, இவர் வயலுக்கு சென்று விட்டு அளவிடங்கான் ஓடை அருகே வந்த போது வண்டலுக்கு சென்ற அரசு பஸ் மோதி பலியானார். சாலைக்கிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் 'போக்சோ'வில் கைது
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே சிறுமிக்கு திருமணம் நடத்தியதோடு அவர் கர்ப்பமாக உள்ளதாக சைல்டு லைன் வழியாக மகளிர் நல அலுவலர் லலிதாவிற்கு புகார் வந்தது. விசாரணையில் சாக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அவரது உறவினரான சிதம்பரம் 24 , என்பவர் திருமணம் செய்து சிறுமியை இரண்டு மாத கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து லலிதா அனைத்து மகளிர் போலீசில் அளித்தார். சிதம்பரத்தை போலீசார் கைது செய்தனர்.
டீ கடையில் புகுந்த கார்
காரைக்குடி: காரைக்குடி அம்மன் சன்னதி வீதியில் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. நேற்று அவ்வழியாக வந்த கார் ஒன்று திடீரென்று கடையின் முன்பகுதியில் மோதி நின்றது. டீக்கடை உரிமையாளர் பாஸ்கரன், மாஸ்டர் அண்ணாதுரை காயங்களுடன் தப்பினர்.காரை ஓட்டி வந்த தேவகோட்டையைச் சேர்ந்த காளிராஜன் என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
மணல் கடத்தியவர் கைது
சிவகங்கை: காளையார்கோவில் போலீசார் கீரனுார் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அந்தவழியாக சென்ற டிப்பர் லாரியை சோதனை செய்தனர். லாரியில் மணல் இருந்தது. லாரியை ஊத்திகுளத்தை சேர்ந்த சிபிராஜ் 22 ஓட்டினார். அவரிடம் போலீசார் விசாரிக்கையில் இளயான்குடி தாலுகா சாலைக்கிராமம் அருகே சாத்தனுாரில் வயல் பகுதியில் மணல் அள்ளியதாக கூறினார். சிபிராஜை கைது செய்த போலீசார் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

