தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்


UPDATED : நவ 04, 2026 11:11 AM

ADDED : நவ 04, 2026 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:11 AM ADDED : நவ 04, 2026 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனம் கூட்டுறவு சங்கம் முன் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் தினசரி 8 ஆயிரத்து 800 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் தேவை போக காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு 5 ஆயிரத்து 900 லிட்டர் பால் அனுப்பப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளியை ஒட்டி லிட்டருக்கு 2 ருபாய் 75 காசு ஊக்கத் தொகையாக வழங்கப்படும். சங்க உறுப்பினர் ஆண்டு முழுவதும் சங்கத்திற்கு விற்பனை செய்யும் மொத்த பால் அளவை கணக்கிட்டு 30 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை கிடைக்கும். விவசாயிகள் வைத்திருக்கும் கறவை மாடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும்.

இந்தாண்டு திருப்புவனம் சங்க உறுப்பினர்களுக்கு லிட்டருக்கு 70 காசு வீதம் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே வரவு வைக்கப்பட்டது.

ஆத்திரமடைந்த உற்பத்தியாளர்கள் நேற்று கூட்டுறவு சங்கத்தில் போராட்டம் நடத்தினர். கூட்டுறவு சங்க அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். உற்பத்தியாளர் ஏனாதி திருமுருகன் கூறுகையில், 25 வருடங்களாக வழங்கி கொண்டிருந்த ஊக்கத் தொகையை வழங்க மறுக்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் நாங்கள் தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்வோம். ஆவின் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய மாட்டோம். எங்களிடம் பாலை வாங்கி 10 ருபாய் லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர்.

சங்க அதிகாரிகள் கூறுகையில், இது ஊக்கத் தொகை கிடையாது. லாபத்தில் பங்கு, தினசரி கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படும் 2 ஆயிரத்து 900 லிட்டருக்கான பங்கு தொகையை உறுப்பினர்கள் கணக்கில் செலுத்தி விட்டோம். ஆவின் நிறுவனம் வழங்கினால் மீதி தொகையை வழங்கி விடுவோம், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us