/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மினி ஸ்டேடியம் வீணாகிறது வீரர்கள் பயன்படுத்த முடியாமல் ஏமாற்றம்

ADDED : ஆக 28, 2025 11:45 PM

காரைக்குடி: காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியிலுள்ள மினி ஸ்டேடியத்தில் நீளம், உயரம் தாண்டும் இடம் முறையாக அமைக்கப்படாததால் வீரர்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.
காரைக்குடியில் பொது விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 9 ஏக்கரில் ரூ.3 கோடி செலவில் மினி ஸ்டேடியம் கட்டப்பட்டது. ஓடுதளம், வாலிபால், கூடைப்பந்து, கோ கோ, கபடி மைதானங்கள் பார்வையாளர் அமரும் காலரி, பொருட்கள் வைப்பறை, அலுவலக அறை, குளியலறை கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தில் ஆற்று மணலுக்கு மாற்றாக எம் சாண்ட், கிரஷர் மண் கொட்டியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பிரச்னை சரி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நீளம் மற்றும் உயரம் தாண்டும் தளம் முறையாக அமைக்கப்படாததோடு அருகே பள்ளம் தோண்டப்பட்டு தடுப்பு சுவர் போல் காட்சி அளிக்கிறது. பயிற்சிக்கு வரும் வீரர்கள் ஏமாற்றத்துடன் பயிற்சி பெற முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.
முறையாக விளையாட்டு திடலை பராமரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.