/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் ஸ்டாலின் ஜன.21ல் வருகை அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
/
முதல்வர் ஸ்டாலின் ஜன.21ல் வருகை அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
முதல்வர் ஸ்டாலின் ஜன.21ல் வருகை அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
முதல்வர் ஸ்டாலின் ஜன.21ல் வருகை அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
ADDED : ஜன 04, 2025 04:00 AM
சிவகங்கை: முதல்வர் ஸ்டாலின் ஜன.,21, 22 ல் சிவகங்கை மாவட்டம் வருகை தர உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கையில் தெரிவித்தார்.
சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதற்கான விழா மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது: ஜன.,21 அன்று காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சார்பில் ரூ.11 கோடியில் கட்டி அழகப்பா பல்கலைக்கு ஒப்படைக்கும் 'வளர் தமிழ் நுாலகம்' மற்றும் திருவள்ளுவர் சிலையை முதல் அமைச்சர் திறந்து, பட்டமளிப்பு விழா அரங்கில் பேசுகிறார்.
அன்று மாலை 5:00மணிக்கு தி.மு.க., நிர்வாகிகளுடன் கட்சி சார்ந்த ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்கிவிட்டு, ஜன.,22 காலை 9:00 மணிக்கு சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவி வழங்குதல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிக்கு துவக்க விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் 40 ஆயிரம் பேருக்கு ரூ.பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார், என்றார்.
சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், தமிழரசி எம்.எல்.ஏ., தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகராட்சி தலைவர் துரைஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன் பங்கேற்றனர்.