/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநகராட்சி அலுவலக கட்டடத்திற்காக காரைக்குடியில் நவீன பூங்கா அகற்றம்
/
மாநகராட்சி அலுவலக கட்டடத்திற்காக காரைக்குடியில் நவீன பூங்கா அகற்றம்
மாநகராட்சி அலுவலக கட்டடத்திற்காக காரைக்குடியில் நவீன பூங்கா அகற்றம்
மாநகராட்சி அலுவலக கட்டடத்திற்காக காரைக்குடியில் நவீன பூங்கா அகற்றம்
ADDED : அக் 05, 2025 04:32 AM

காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சி யில் புதிய மாநகராட்சி கட்டடம் கட்டுவதற்காக, வேறு இடமே இல்லாதது போல் ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்காவை அகற்றும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே 2011ம் ஆண்டு ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் நவீன பூங்கா திறக்கப் பட்டது. நீரூற்றுகள், பிரம்மாண்ட சிலைகள், புல்தரைகள், விளையாட்டு திடல் கேன்டீன் வசதி யுடன் நவீன பூங்கா செயல்பட்டு வந்தது.
பொழுதுபோக்கு அம்சமே இல்லாத காரைக்குடி மக்களுக்கு இந்த பூங்கா வரப் பிரசாதமாக அமைந்தது. மாலை நேரங்களில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். நுழைவு கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாந கராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்த நிலையில் நவீன பூங்கா இருந்த இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
ரூ.15.80 கோடி நிதி யில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. மக்கள் அதிகம் பயன் படுத்தி வந்த நவீன பூங்கா, மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பூங்காவை அகற்றும் பணி தற்போது தொடங்கி யுள்ளது.
வேறு இடமே இல்லாதது போல் மக்கள் பயன்படுத்தி வந்த பூங்காவை அகற்றி புதிய கட்டடம் கட்டுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.