/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதகுபட்டியில் குரங்குகள் வீடுகளில் புகுந்து ரகளை
/
மதகுபட்டியில் குரங்குகள் வீடுகளில் புகுந்து ரகளை
ADDED : நவ 19, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டியில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை பூட்டியிருக்கும் வீடுகளில் கூட்டமாக ஓட்டை பிரித்தும் ஜன்னல் வழியாகவும் நுழைந்து சமையலறையில் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்வதும், அவற்றை சிதறிவிட்டு செல்வதும் தொடர்கிறது.
வீடுகளில் ஆட்கள் இருந்தாலும் பயமின்றி உள்ளே நுழைகின்றன. கூட்டமாக வருவதால் அவற்றைத் தடுக்க முடியவில்லை. விரட்டினால் கடிக்கின்றன. சில வீடுகளின் கூரையையும் சேதப்படுத்துகின்றன. குரங்குகளை பிடிக்க வனத் துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

