/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ரயில்வே கேட் அருகே பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
/
மானாமதுரை ரயில்வே கேட் அருகே பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
மானாமதுரை ரயில்வே கேட் அருகே பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
மானாமதுரை ரயில்வே கேட் அருகே பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 28, 2024 05:27 AM

மானாமதுரை: மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட் அருகே உள்ள ரோடு குண்டும்,குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து செல்லும் சர்வீஸ் ரோடு பைபாஸ் ரயில்வே கேட் வழியாக சென்று மீண்டும் 4 வழிச்சாலையை அடைகிறது.இந்த ரோட்டிலிருந்து அண்ணாதுரை சிலை வழியாக நகர் பகுதிகளுக்கு ரோடு செல்கிறது.
இந்த ரோட்டின் வழியாக தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் பைபாஸ் ரயில்வே கேட் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு மின் வயர்கள் கொண்டு செல்வதற்காக ரோட்டை தோண்டி வேலை செய்தனர்.
மீண்டும் ரோட்டை முறையாக சீரமைக்காததால் அப்பகுதியில் பள்ளம் உருவாகியுள்ளது.குண்டும்,குழியுமாக இருப்பதினால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி இதில் டூவீலர்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.ரோட்டை உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.