/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பைபாஸ் ரோட்டில் எரியும் குப்பை தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
பைபாஸ் ரோட்டில் எரியும் குப்பை தவிக்கும் வாகன ஓட்டிகள்
பைபாஸ் ரோட்டில் எரியும் குப்பை தவிக்கும் வாகன ஓட்டிகள்
பைபாஸ் ரோட்டில் எரியும் குப்பை தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 08, 2024 01:03 AM

திருப்புவனம்: தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தினசரி குப்பைகளை கொட்டி தீ வைப்பது தொடர்கிறது.
நேற்று குப்பையில் தீ வைத்த நிலையில் ஆள் உயரத்திற்கு புகை வந்ததால் வாகன ஓட்டிகள் தவித்தனர்.
திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி ஆறு டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன. தற்போது திருவிழா காலம் என்பதால் சேகரிக்கப்படும் குப்பை அதிகரித்த வண்ணம் உள்ளது.
குப்பையை அழிக்க முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. தினசரி சேகரிக்கப்படும் குப்பையை வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் கொட்டி தீவைத்து அழித்து வருகின்றனர்.
பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகலில் பஸ் பயணம் என்பது மக்களுக்கு பெரும் சிரமத்தை அளித்து வரும் நிலையில், நேற்று திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் விலக்கில் சாலையோரம் பாலிதீன் கழிவுகளை கொட்டி தீ வைத்ததால் எழுந்த கரும்புகையால் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

