/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முட்புதர் மண்டிய குப்பை பிரிப்பு மையம்
/
முட்புதர் மண்டிய குப்பை பிரிப்பு மையம்
ADDED : மார் 14, 2024 11:44 PM

தேவகோட்டை, : தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த காரை ஊராட்சியில் உள்ளது பெரியகாரை கிராமம் . இக்கிராமத்தின் எல்லையில், நீர்பிடிப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை பிரித்து நிறுவனங்களுக்கு அனுப்பும் வகையில் தொட்டிகளுடன் மையம் கட்டப்பட்டு உள்ளது.
ஆனால் குப்பை பிரிப்பு மையம் செயல்படாமல் உள்ளது. மையத்திற்கு செல்ல முடியாத நிலையில் சுற்றிலும் முட்புதர் மண்டி கிடக்கிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பல லட்சங்களில் எல்லா கிராமங்களிலும் கட்டப்பட்டுள்ள குப்பை பிரிப்பு மையங்களின் நிலைமையும் இதே நிலையில் தான் உள்ளது .
சில ஊர்களில் மையங்களே சேதமாகி இருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமம் தோறும் ஆய்வு நடத்தி குப்பைகளை தரம் பிரித்து அனுப்பும் மையங்களை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும்.

