/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகராட்சி கவுன்சில் அரங்கம் கவுன்சிலர்கள் அச்சம்
/
நகராட்சி கவுன்சில் அரங்கம் கவுன்சிலர்கள் அச்சம்
ADDED : டிச 27, 2025 05:35 AM
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சியில் அலுவலக கட்டடம் கட்டி 10 ஆண்டுகளே ஆகின்றன. கீழ்தளத்தில் அலுவலகத்தின் பெரும்பாலான பிரிவுகள், நகராட்சி தலைவர், கமிஷனர் அறை செயல்படுகின்றன.
முதல் தளத்தில் கவுன்சில் கூட்ட அரங்கமும் உள்ளது. பெரிய ஹாலில் வேறு துறை பிரிவுகள் செயல்படுகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கீழ் தளத்தில் கழிப்பறை, கதவு சேதமடைந்து வருகிறது. கட்டட சுவற்றில் வெடிப்புகள் உள்ளன. முதல் தளத்தில் கான்கிரீட் கலவை உதிர்ந்து கொட்டுகிறது. கவுன்சிலர் கூட்ட அரங்கத்தில் கான்கிரீட் நாளுக்கு நாள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.
கவுன்சிலர்கள் பல முறை கூறியும் அதிகாரிகள் மராமத்து பணிகளை பார்ப்பது கிடையாது என புலம்புகின்றனர்.

