/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் நாளை ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு
/
சிவகங்கையில் நாளை ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : டிச 27, 2025 05:35 AM
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்தில் 25 கண்மாய்களில் நாளை ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பை வனத்துறையினர் நடத்துகின்றனர்.
வனத்துறையினர் ஆண்டு தோறும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர்.
நீர்நிலைகள் சார்ந்த ஈரநிலம் மற்றும் நிலப்பறவைகள் என்று இருவிதமாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் டிச.28 ல் முதல் கட்டமாக ஈரநிலப்பறவைகள் கணக்கெடுக்கப்படுகிறது. இன்று வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் கொள்ளுகுடி பார்வையாளர்கள் மையத்தில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில், வனத் துறையினர், பறவை வல்லுநர்கள் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்களுக்கு கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.
திருப்புத்தூர் ஆ.பி.சீ.அ.கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்
மாவட்ட அளவில் பறவைகள் சரணாலயக் கண்மாய்கள் உள்ளிட்ட பறவைகள் அதிகமாக வலைசை போகும் கண்மாய்களில் தேர்வு செய்யப்பட்ட 25 கண்மாய்களில் பறவைகள் கணக்கெடுப்பு காலை முதல் மாலை வரை நடைபெறும்.

