ADDED : செப் 11, 2025 06:06 AM
சிவகங்கை : அமராவதிபுதுார் கிராமிய பயிற்சி மையத்தில் தேசிய வங்கி சேவைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். ரிசர்வ் வங்கி தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல இயக்குனர் உமாசங்கர் சிறப்புரை ஆற்றினார். ஐ.ஓ.பி., காரைக்குடி மண்டல முதுநிலை மேலாளர் ஷஹரேயர், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அருண்பாண்டியன், ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், கனராவங்கி மண்டல மேலாளர் விஜயாசேகர், பிள்ளையார்பட்டி வேளாண்மை பயிற்சி மைய இயக்குனர் சண்முகம், பிள்ளையார்பட்டி இந்தியன் வங்கி மேலாளர் குணாமணி, பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் சிந்தாபாரத் சந்த், குன்றக்குடி பாங்க் ஆப் இந்தியா மேலாளர் தீபக் வினோத் குமார், சிவகங்கை தமிழ்நாடு கிராம வங்கி ஆலோசகர் பிச்சுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் தேசிய வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு, பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் பிரீமியம் ரூ.436 செலுத்தி ரூ.2 லட்சம் காப்பீடு, பிரதமரின் சுரக்சா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பிரீமியம் ரூ.20 செலுத்தி விபத்து காப்பீடு தொகை ரூ.2 லட்சம், விபத்தால் உடல் பாதித்தோருக்கு ரூ.1 லட்சம் காப்பீடு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.