ADDED : அக் 02, 2025 11:38 PM

திருப்புத்துார் ; திருப்புத்தூர் திருத்தளிநாதர் மற்றும் பூமாயி அம்மன் கோயில்களில் நவராத்திரி விழாவை நிறைவை முன்னிட்டு நடந்த அம்மன் அம்பு எய்தல் வைபவங்களில் பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
திருத்தளிநாதர் கோயிலில் செப்.23 முதல் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினசரி மூலவர் சிறப்பு அலங்காரமும், கொலு மண்டபத்தில் உற்ஸவ அம்மன் எழுந்தருளி தீபாராதனையும் நடைபெற்றது.
நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடந்தது.
சிவகாமி அம்மன் சன்னதியில் பூஜிக்கப்பட்ட அம்புடன் அம்மன் புறப்பாடானார். தொடர்ந்து கோயில் அருகில் அம்மன் அம்பு எய்தினார்.
பூமாயி அம்மன் கோயிலில் துவக்க நாளில் திருவிளக்கு பூஜையும், லட்சார்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து தினசரி லட்சார்ச்சனையும், மாலை உற்ஸவ அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனையும் நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு துவங்கியது. தொடர்ந்து கோயில் முன்புற திடலில் எழுந்தருளி அம்பு எய்தல் நடந்தது.
அம்மன் அம்பு எய்தலில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.