/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிக்காடுக்கு புதிய பஸ் இயக்கம்
/
குடிக்காடுக்கு புதிய பஸ் இயக்கம்
ADDED : டிச 20, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து கண்ணங்குடி குடிக்காடு பகுதிக்கு சிறுவாச்சி வழியாக பழைய பஸ்களே தொடர்ந்து இயக்கப்பட்டது.
மக்கள் போராட்டம் காரணமாக 10 தினங்களுக்கு முன் தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையின் போது பழைய டவுன் பஸ்சை மாற்றவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று புதிய பஸ் சிறுவாச்சி வழித்தடத்தில் கண்ணங்குடிக்கு இயக்கப்பட்டது. எம்.எல்.ஏ., மாங்குடி துவக்கி வைத்தார்.

