/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நீதிமன்ற ரோட்டில் புதிய கலெக்டர் அலுவலக கட்டடம் ரூ.89 கோடியில் விரைவில் துவங்கும்

ADDED : பிப் 04, 2025 05:16 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு ரூ.89 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அறிவிப்பு சட்டசபையில் வெளியானதும், மின்வாரிய அலுவலகம் பின்னால் புதிய கட்டடம் அமைய உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1984 ம் ஆண்டு சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவானது. 1985 முதல் இப்புதிய மாவட்டம் நரேஷ்குப்தா ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் துவங்கியது. கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டி 41 ஆண்டான நிலையில், அலுவலக கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன. இதற்காக புதிய கலெக்டர் அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஜன., 22 அன்று சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலின், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு ரூ.89 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார்.
இந்த கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்வாரிய அலுவலக பின்புறம் பழைய ஐ.டி.ஐ., செயல்பட்ட இடத்தில் புதிய அலுவலகம் கட்டுவதென தீர்மானித்துள்ளனர்.
சட்டசபை மானியக்கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு, அரசாணை வந்ததும் பொதுப்பணித்துறையினரின் நேரடி பார்வையில் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு கட்டடம் கட்டும் பணி துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.