/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆவினில் 100 மி.லி., ரூ.5 'நைஸ்' பால் விற்பனை
/
ஆவினில் 100 மி.லி., ரூ.5 'நைஸ்' பால் விற்பனை
ADDED : நவ 08, 2025 01:28 AM

காரைக்குடி: காரைக்குடி ஆவின் விற்பனையகங்களில், புதிய வரவான 100 மி.லி., பால் ரூ.5 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காரைக்குடி கழனிவாசல் அருகேஆவின் நிறுவனம் செயல்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது. காரைக்குடி பகுதியில் 60க்கும் மேற்பட்ட ஆவின் பூத்கள் மூலம் பால் மற்றும் ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஆரஞ்சு, வயலட் நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு பாக்கெட் ஒரு லிட்டர் ரூ.60 அரை லிட்டர், ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வயலட் கலர் அரை லிட்டர் ரூ.22 க்கும், 200 மி.லி., ரூ. 9 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிதாக, 100 மி.லி., ஆவின் பால் நைஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. காரைக்குடி ஆவின் பூத்களில் ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நைஸ் என்ற பெயரில் ஊதா நிற பால் பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் பாக்கெட்டின் பின்புறம் 500 மி.லி., என்று குறிக்கப்பட்டுள்ளது.

