/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எந்த வளர்ச்சி திட்டமும் தெரியவில்லை கடன் தான் கண்ணுக்கு தெரிகிறது * முன்னாள் அமைச்சர் உதயகுமார் கமென்ட்

ADDED : மே 16, 2025 11:44 PM
காரைக்குடி:''தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் கடன் தான் கண்ணுக்கு தெரிகிறது. எந்த வளர்ச்சி திட்டமும் தெரியவில்லை,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கமென்ட் அடித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. இதுகுறித்து சட்டசபையில் பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. மக்களிடம் அ.தி.மு.க., அரசு நிறைவேற்றிய சாதனைகளையும், தி.மு.க., ஆட்சியில் நடக்கும் வேதனைகளையும் விளக்கிடும் நோக்கில் திண்ணைப்பிரசாரம் நடக்கிறது.
தமிழகத்தில் எந்த பிரச்னை நடந்தாலும் அதனை திசை திருப்பும் வகையில் தி.மு.க.,வினர் மத்திய அரசு குறித்து பேசுவர். முதல்வர் ஸ்டாலின், இல்லாத பிரச்னைக்கு தீர்மானம் அமைப்பது, குழு அமைப்பதை தான் செய்து வருகிறார். இதைத்தவிர வேற எதுவும் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. ஸ்டாலின் தான் நடந்து கொண்டே இருக்கிறார். நிர்வாகம் துாங்குகிறது.
தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் வாங்கிய கடன் ரூ.4.50 லட்சம் கோடி. இதனை ரிசர்வ் வங்கி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. இதிலிருந்தே தெரிந்துவிடும் எது சிறந்த நிர்வாகம் என்று. தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். நீட் தேர்வு ரகசியம் உள்ளது என்கிறார். ஆனால் அது வெறும் காலி பெருங்காய டப்பா. இவ்வாறு பேட்டியளித்தார்.