தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/செயல்படாத சுகாதார வளாகங்கள்

செயல்படாத சுகாதார வளாகங்கள்

செயல்படாத சுகாதார வளாகங்கள்


UPDATED : நவ 19, 2026 12:00 AM

ADDED : நவ 18, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 12:00 AM ADDED : நவ 18, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் செயல்படாததால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.

திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, முதுவன்திடல், பழையனூர் உள்ளிட்ட பகுதி வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. இவர்களுக்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார வளாகங்கள் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன. ஆண், பெண் என தனித்தனியாக தண்ணீர் வசதியுடன் சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன.

சுகாதார வளாகங்கள் அந்தந்தந்த பகுதி மக்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தன. உரிய கண்காணிப்பு இல்லாததால், ஒரு சில இடங்களில் மட்டுமே சுகாதார வளாகங்கள் செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் சுகாதார வளாகங்கள் செயல்படவே இல்லை. காரணம் சுகாதார வளாகங்களை ஒட்டி கஞ்சா விற்பனை களைகட்டுவதால் பெண்கள் அந்த பகுதியில் செல்ல முடிவதில்லை. பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் இயற்கை உபாதைக்காக அந்தந்த பகுதிகளில் உள்ள மறைவிடங்கள், சாலையோரம், கருவேல மரங்களை மறைவிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார கேடு நிலவி வருவதுடன் நோய் தொற்றும் பரவி வருகிறது.

முதுவன்திடல், கலியாந்தூர் உள்ளிட்ட சில கிராமங்களில் நுழையவே முடியவில்லை. சாலையை ஒட்டி இயற்கை உபாதையை கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பயன்பாடு இல்லாத சுகாதார வளாகங்களில் உள்ள கதவு, மோட்டார்களை சிலர் திருடி விற்பனை செய்து விட்டனர். இதனால் சுகாதார வளாகங்கள் செயல்படுவதே இல்லை. சுகாதார வளாகங்கள் செயல்படாததால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுத்து சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us