ADDED : ஜூலை 10, 2025 11:42 PM

சிவகங்கை: அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்துவதை கண்டித்து தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பஞ்சவர்ணம், புவனேஸ்வரி தலைமை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் மல்லிகா, காந்திமதி, சாந்தி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் நடுநிலை சுகாதார பணியாளர்களை உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
4000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை செவிலியர் பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும். மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உயர்வதை தடுக்க சுகாதார செவிலியர்களின் நேரத்தையும் உழைப்பையும் முழுமையாக எடுத்துக் கொள்ளும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.