/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டை மறைக்கும் கருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் அவதி
/
ரோட்டை மறைக்கும் கருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் அவதி
ரோட்டை மறைக்கும் கருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் அவதி
ரோட்டை மறைக்கும் கருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 19, 2025 09:18 PM
சாலைக்கிராமம்: இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் ரோடுகளை ஒட்டி வளர்ந்துள்ள கருவேல மரங்கள் ரோடுகளை மறைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலைக்கிராமத்திலிருந்து கிளாஞ்சுனை செல்லும் ரோட்டில் அய்யம்பட்டி நான்கு ரோடு, வியயாதகண்டன்,சங்கனி,பஞ்சாத்தி,வடதிருக்கை,கிளாஞ்சுனை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் ரோட்டின் இரு புறங்களிலும் ஆங்காங்கே கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து வாகன ஓட்டிகளை காயப்படுத்தி வருகிறது.மேலும் ரோட்டை மறைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததனால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது, சாலைக்கிராமம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரோடுகளின் ஓரங்களில் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றோம்.மேலும் ரோட்டின் ஓரங்களிலேயே குப்பைகளையும், கால்நடை கழிவுகளையும் குவித்து வைப்பதினால் துர்நாற்றம் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ரோட்டின் ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களையும், குப்பைகளையும் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.