/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீபாவளிக்கு சிறப்பு பஸ்களாக மாற்றம் பெற்ற டவுன் பஸ்கள்
/
தீபாவளிக்கு சிறப்பு பஸ்களாக மாற்றம் பெற்ற டவுன் பஸ்கள்
தீபாவளிக்கு சிறப்பு பஸ்களாக மாற்றம் பெற்ற டவுன் பஸ்கள்
தீபாவளிக்கு சிறப்பு பஸ்களாக மாற்றம் பெற்ற டவுன் பஸ்கள்
ADDED : அக் 19, 2025 09:18 PM
மானாமதுரை: மானாமதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டவுன் பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்கியதால் கிராம மக்கள் மிகுந்த அவதிக் குள்ளாகினர்.
மானாமதுரையில் இருந்து இளையான்குடி, தாயமங்கலம்,பரமக்குடி,திருப்புவனம், திருப்பாச்சேத்தி,மல்லல்,சிவகங்கை, நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக மானாமதுரை பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களை இரவில் மதுரைக்கு சிறப்பு பஸ்களாக இயக்குவதால் காலை நேரத்தில் கிராமங்களுக்கு பஸ்கள் செல்லாததினால் கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, மானாமதுரை பகுதிகளில் ஓடும் டவுன் பஸ்களை கடந்த 3 நாட்களாக தீபாவளி பண்டிகைக்காக மதுரைக்கு சிறப்பு பஸ்களாக இயக்கி வருகின்றனர். இதனால் அதிகாலையில் பரமக்குடி, செய்களத்தூருக்கு பஸ்கள் வராமல் கிராம மக்கள் தீபாவளிக்குபொருட்களை வாங்க போதிய பஸ் வசதியின்றி தவிப்பிற் குள்ளாகினர் என்றனர்.