/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் கருவேல மரங்கள்
/
நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் கருவேல மரங்கள்
நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் கருவேல மரங்கள்
நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் கருவேல மரங்கள்
ADDED : ஜூலை 16, 2025 11:29 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாததால் விபத்து தொடர்கிறது.
இப்பகுதியில் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காளாப்பூர், மருதிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்படாததால் இச்செடிகள் டூவீலர்களில் செல்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் எதிரில் வாகனங்கள் வரும்போது கருவேல மரங்கள் இருப்பது தெரியாமல் பலர் காயமடைந்துள்ளனர். இச்சாலை தவிர கல்லம்பட்டி, பிரான்மலை, மருதிப்பட்டி, சூரக்குடி உள்ளிட்ட கிராம சாலைகளிலும் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது ரோட்டோரங்களில் வளர்ந்துள்ள இம்மரங்களை அகற்றி விபத்துகளை தடுக்க வேண்டும்.