/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நடவடிக்கை வீடுகளை கட்டாத 357 பேரிடம் நிதியை பெற பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் அதிகாரிகள் அதிரடி
/
நடவடிக்கை வீடுகளை கட்டாத 357 பேரிடம் நிதியை பெற பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் அதிகாரிகள் அதிரடி
நடவடிக்கை வீடுகளை கட்டாத 357 பேரிடம் நிதியை பெற பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் அதிகாரிகள் அதிரடி
நடவடிக்கை வீடுகளை கட்டாத 357 பேரிடம் நிதியை பெற பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் அதிகாரிகள் அதிரடி
ADDED : ஜூலை 03, 2025 03:15 AM
சிவகங்கை, ஜூலை 3-மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் திட்டத்தில் தேர்வு பெற்ற பயனாளிகளில் வீடு கட்டாத 357 பேரிடம் அரசு வழங்கிய நிதியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 2016- -=2017 ம் ஆண்டு முதல் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் 270 சதுர அடி இடத்தில் வீடு கட்டிக்கொள்ள ரூ.2.40 லட்சம் வரை வழங்கி வருகிறது. 2016 - 2017 முதல் 2021- 2022 ம் ஆண்டு (6 ஆண்டிற்கு) வரை 10 ஆயிரத்து 295 பயனாளிகள் வீடுகள் கட்டிக்கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் கடந்த 6 ஆண்டுகளில் 9,770 பயனாளிகள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
எஞ்சிய 468 பயனாளிகளிடம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வீட்டை கட்டுங்கள், இல்லாவிடில் அரசு வழங்கிய நிதியை திரும்ப செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து மாவட்ட அளவில் 111 பயனாளிகள் தொடர்ந்து வீடுகளை கட்டிக்கொள்வதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் 6 ஆண்டுகளை கடந்தும் இது வரை வீடே கட்டாமல் உள்ள 357 பயனாளிகளை கண்டறிந்து,அரசிடமிருந்து பெற்ற தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்தந்த ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் மூலம் கட்டாத வீடுகளுக்கு அரசு வழங்கிய நிதியினை பயனாளிகளிடமிருந்து வசூலித்து வருகின்றனர். * அரசின் கனவு இல்லம் திட்டம்: இந்நிலையில் தமிழக அரசு கனவு இல்லம் திட்டம் மூலம் 2024- 2025 ம் ஆண்டில் 741 பயனாளிகள் தேர்வு செய்து, 360 சதுர அடியில் வீடு கட்டிக்கொள்ள ஒரு நபருக்கு ரூ.3.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. 2025- 2026ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட அளவில் 1,000 வீடுகள் கிராமங்களில் கட்டிக்கொள்ள பயனாளிகள் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.