ADDED : செப் 01, 2025 02:24 AM

படம் உண்டு சிவகங்கை, செப்.1- -காளையார்கோவிலில் ஒலிம்பியாட் சுடர் ஏந்தும் விழா நேற்று நடைபெற்றது. காளையார்கோவில் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் குழு சார்பில் நடந்த விழாவிற்கு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முருகன் தலைமை வகித்தார். போலீஸ்
எஸ்.ஐ., அமுதா முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் லதா, சைக்கிள் ஓட்டுவோர் கழக தலைவர் நாகராஜன், விளையாட்டு மைய கூட்டமைப்பு துணை தலைவர் மோசஸ், பிரான்சிஸ், ராமர்பாண்டி, கலைச்செல்வம், செயலாளர் சூசை ஆரோக்கியமலர் , இணை செயலாளர் ஜான் பீட்டர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டமைப்பின் தலைவர் பக்கீர் முகைதீன் வரவேற்றார். பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார். காளையார்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நகரின் 16 இடங்களில் உள்ள விளையாட்டு கூட்டமைப்பு மையங்களுக்கு சென்று, அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி நிறுவனத்தில் நிறைவு பெற்றது. காளையார் கோவில் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ////