/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி ‛சிக்ரியில்' மே 13 முதல் 17வரை ‛ஒரு நாள் விஞ்ஞானி' நிகழ்ச்சி
/
காரைக்குடி ‛சிக்ரியில்' மே 13 முதல் 17வரை ‛ஒரு நாள் விஞ்ஞானி' நிகழ்ச்சி
காரைக்குடி ‛சிக்ரியில்' மே 13 முதல் 17வரை ‛ஒரு நாள் விஞ்ஞானி' நிகழ்ச்சி
காரைக்குடி ‛சிக்ரியில்' மே 13 முதல் 17வரை ‛ஒரு நாள் விஞ்ஞானி' நிகழ்ச்சி
ADDED : ஏப் 16, 2025 02:08 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ‛சிக்ரியில்' மாணவர்களுக்கான ‛ஒரு நாள் விஞ்ஞானி' நிகழ்ச்சி மே 13 முதல் 17 வரை நடக்கிறது.
பிரதமர் மோடி பிப்., 23 ல் ‛மன்கிபாத்' நிகழ்ச்சியில் பேசும் போது பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆராய்ச்சியை தோற்றுவிக்க, ‛ஒரு நாள் விஞ்ஞானி' திட்டத்தை செயல்படுத்த சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்துக்கு (மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்) உத்தரவிட்டார்.
அதன்படி காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.,) மே 13 முதல் 17 வரை ‛ஒரு நாள் விஞ்ஞானி' கருத்தரங்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு நடத்த முடிவு செய்துள்ளது.
இக்கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள், சிக்ரி மூத்த விஞ்ஞானிகளிடம் உரையாடலாம். வினாடி வினா போட்டி, அறிவியல் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு குறித்து அறிந்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு குறைந்தது 75 முதல் 100 மாணவர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் 10 ஆயிரம் மாணவர்கள் வரை இக்கருத்தரங்கில் பயன்பெற செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும்.
இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ‛https://jigyasa-csir.in/ என்ற இணையதளத்தில் ஏப்., 28 முதல் மே 2 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் மட்டுமே காரைக்குடியில் ‛சிக்ரியில்' பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் எஸ்.அங்கப்பனை 99946 14582 ல் தொடர்பு கொள்ளலாம்.

