UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை அருகே மேலுார் ரோட்டில் வாளுடன் சுற்றியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை எஸ்.ஐ., மாரிமுத்து தலைமையிலான போலீசார் மேலுார் ரோட்டில் ரோந்து சென்றனர். சக்கந்தி அருகே ஒருவர் வாளுடன் இருந்துள்ளார். அவரை விசாரிக்க முயற்சித்த போது அவர் போலீசாரை மிரட்டினார். அவரை பிடித்து விசாரிக்கையில் அவர் தேவினிப்பட்டி விக்னேஸ்வரன் 24 என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்தனர்.
