/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆன்லைனில் மனை அப்ரூவல் உள்ளாட்சிகளுக்கு 2 கட்ட பயிற்சி
/
ஆன்லைனில் மனை அப்ரூவல் உள்ளாட்சிகளுக்கு 2 கட்ட பயிற்சி
ஆன்லைனில் மனை அப்ரூவல் உள்ளாட்சிகளுக்கு 2 கட்ட பயிற்சி
ஆன்லைனில் மனை அப்ரூவல் உள்ளாட்சிகளுக்கு 2 கட்ட பயிற்சி
ADDED : பிப் 15, 2024 05:16 AM
சிவகங்கை: உள்ளாட்சி அமைப்புகள் ஆன்லைனில் மனைக்கு அப்ரூவல் வழங்கும் பொருட்டு, உள்ளாட்சி அலுவலர்களுக்கு சிவகங்கையில் இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
மனையிடங்களை வரன்முறை செய்யும் விதமாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், குடியிருப்புகளுக்கு அதிகபட்சம் 10,000 சதுர அடிக்குள் தரைத்தளம் மற்றும் 2 மாடி வீடுகள், தரையில் வீடுகளின்றி 3 மாடி வீடுகள் கட்டிக்கொள்ளவும். ஒரே குடியிருப்பின் கீழ் அதிகபட்சம் 8 வீடுகளுக்கு மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் அப்ரூவல் வழங்க வேண்டும்.
வணிக நிறுவனங்கள் அதிகபட்சம் 2,000 சதுர அடிக்குள், தரைத்தளம், முதல் மாடி கட்டடத்திற்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். இதற்கு மேல் ஒரு சதுர அடி கூட மனையிடத்திற்கு அப்ரூவல் வழங்க கூடாது. அதற்கு மேல் உள்ள நிலங்களுக்கு மனையிட அப்ரூவல் பெற ஆன்லைனில் மாவட்ட நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, அப்ரூவல் பெற வேண்டும்.
பள்ளி, கல்லுாரி, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மற்ற அனைத்து வணிக, சேவை நிறுவனங்களும் கட்டாயம் மாவட்ட நகர் ஊரமைப்பு துறையில் மட்டுமே அப்ரூவல் பெற வேண்டும்.
இது வரை உள்ளாட்சி அமைப்புகள் 'காகித வடிவில்' அப்ரூவல் வழங்கி வந்தனர். இனி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 'பாஸ்வேர்ட்' வழங்கி, ஆன்லைன் மூலமே மனையிட அப்ரூவல் வழங்க வேண்டும் என நகர் ஊரமைப்புத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக, ஊராட்சிகளின் செயலர், பேரூராட்சி, நகராட்சி அலுவலர்களுக்கு 'ஆன்லைனில்' மனையிட அப்ரூவல் வழங்குவதற்கான பயிற்சி நகர்ஊரமைப்பு துறையினரால் வழங்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பினரில் திருப்புத்துார், சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 4 தாலுகாவிற்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களுக்கு பிப்., 16 அன்று காரைக்குடி பி.எல்.பி., பேலஸ் மகாலில் பயிற்சி அளிக்க உள்ளனர். சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில், திருப்புவனம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட உள்ளாட்சி அலுவலர்களுக்கு பிப்., 21 அன்று சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.

