/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திறந்தவெளி அருங்காட்சியகம் லேசர் மீட்டர் மூலம் அளவீடு
/
திறந்தவெளி அருங்காட்சியகம் லேசர் மீட்டர் மூலம் அளவீடு
திறந்தவெளி அருங்காட்சியகம் லேசர் மீட்டர் மூலம் அளவீடு
திறந்தவெளி அருங்காட்சியகம் லேசர் மீட்டர் மூலம் அளவீடு
ADDED : ஜன 30, 2025 09:47 PM

கீழடி; கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க லேசர் மீட்டர் மூலம் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
கீழடியில் 17 கோடியே பத்து லட்ச ரூபாய் செலவில்ஐயாயிரத்து 914 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. திறந்த வெளி அருங்காட்சியக பணிக்காக மண் பரிசோதனை நடந்து வரும் நிலையில் லேசர் மீட்டர் மூலம் அளவீடு பணிகள் நடந்து வருகின்றன.
7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 7ம் கட்ட அகழாய்வில் மொத்தம் எட்டு குழிகள் தோண்டப்பட்டு மீன் உருவம் வரையப்பட்ட உறைகிணறு, சிவப்பு நிற பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. இவை 20 மீட்டர் நீள, அகலத்தில் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியஇடங்கள், மாநில தொல்லியல் துறை அகழாய்வு நடத்திய இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இதில் 6ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட உலைகலன், 32 அடுக்குகள் கொண்ட தமிழகத்தின் மிகப்பெரிய உறைகிணறு, சுருள் வடிவ குழாய் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இதற்காக அமைய உள்ள குழிகள் அமைப்பதற்காக நீள அகலங்கள் அளவீடு செய்யப்படுகின்றன. டேப் மூலமும் லேசர் மீட்டர் மூலமும் அளவீடு பதிவு செய்யப்படுகிறது. பொருட்களின் தன்மைக்கு ஏற்ப குழிகளின் அளவும் மாறுபட உள்ளது.
இவற்றை தொடர்ச்சியாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வண்ணம் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைய உள்ளது.