ADDED : மார் 08, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை,: மானாமதுரை உடைகுளத்தில் பனந்துாரிகை தொழில்நுட்ப கூடம் கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் மூடி கிடந்தது.
இக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ., தமிழரசியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எம்.எல்.ஏ., தமிழரசி தொழில்நுட்ப பணிக்கூடத்தை திறந்து வைத்து பனை பொருள் விற்பனையை துவக்கி வைத்தார். கதர் கிராம தொழில்கள் துறை உதவி இயக்குனர் நல்லதம்பி, பனைத் தொழில்நுட்ப பணி கூட திட்ட அலுவலர் மாரியப்பன், முன்னாள் திட்ட இயக்குனர் ஆறுமுகம், நகராட்சி துணைத் தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய செயலாளர் துரை ராஜா மணி மானாமதுரை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, இந்துமதி மற்றும் பனந்துாரிகை தொழில்நுட்ப பணி கூட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

