/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'‛ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி ஊர்வலம்
/
'‛ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி ஊர்வலம்
ADDED : மே 25, 2025 11:12 PM

சிவகங்கை: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கூடாரங்களை அழித்து வெற்றி கண்ட 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்கு பாடுபட்ட முப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிவகங்கையில் பா.ஜ.,வினர் தேசிய கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
சிவகங்கை வேலுநாச்சியார் மணி மண்டபத்தில் துவங்கிய ஊர்வலம் ரயில்வே மேம்பாலம், பஸ் ஸ்டாண்ட், மதுரை முக்கு, காளவாசல் வழியாக முத்துபட்டி வரை சென்றது. பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஓ.பி.சி., அணி நிர்வாகி நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, கிழக்கு ஒன்றிய தலைவர் நாட்டரசன், மகளிரணி ஹேமமாலினி, முன்னாள் நகர் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.