/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பள்ளி முன் பஸ் ஸ்டாப் கட்ட எதிர்ப்பு
/
சிவகங்கையில் பள்ளி முன் பஸ் ஸ்டாப் கட்ட எதிர்ப்பு
சிவகங்கையில் பள்ளி முன் பஸ் ஸ்டாப் கட்ட எதிர்ப்பு
சிவகங்கையில் பள்ளி முன் பஸ் ஸ்டாப் கட்ட எதிர்ப்பு
ADDED : டிச 26, 2025 05:32 AM

சிவகங்கை: சிவகங்கையில், மதுரை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி முதன் பஸ் ஸ்டாப் கட்ட நகராட்சி பணிகளை துவக்கியது. இதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், பணியை ரத்து செய்தனர். -
இங்குள்ள பள்ளியில் 3,750 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் முன் நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாப் கட்டுவதற்கான அடிப்படை பணிகளை துவக்கினர். இதற்கு பள்ளி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இங்கு பஸ் ஸ்டாப் கட்டினால் வாகன விபத்து ஏற்படும், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும். இதனால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும்.
எனவே பஸ் ஸ்டாப் கட்டக்கூடாது என ஆசிரியர்கள், பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் பலமுறை நகராட்சியில் தெரிவித்தும், அதையும் மீறி பஸ் ஸ்டாப் கட்டும் பணியை துவக்கியதால் அதிருப்தியான பள்ளிநிர்வாகம் கடும் எதிர்ப்பை கிளப்பியதை அடுத்து பணியை நகராட்சி நிர்வாகம் கைவிட்டது.

