ADDED : நவ 06, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை நகரில் ரோட்டோரத்தில் உள்ள பழைய மரங்கள் வெட்டப் படுவதற்கு ஹிந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நகர தலைவர் சுரேஷ் கூறுகையில், ஏற்கனவே திருப்புத்துார் ரோட்டில் உள்ள மரங்களை சிலர் வெட்டும் போது அதிகாரிகளிடம் தெரிவித்தோம். மாவட்ட கலெக்டரிடமும் புகார் செய்யப்பட்டது.
ஜீவா நகரில் வெட்டி கடத்தப்பட்டது குறித்து தாசில்தாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு போய் விட்டனர். ஒரு வாரத்திற்கு முன்பு தி.ஊரணி பகுதியில் மரம் வெட்டப்பட்டு உள்ளது என்றார்.

