ADDED : ஜூன் 07, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள ஏனாதி செங்கோட்டை கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.இக்கோயிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.
வருகிற 8ம் தேதி ஆடுகள் வெட்டி பலியிடும் பூஜை நடைபெற உள்ளது. இக்கோயிலில் வழக்கமாக ஆடுகள் வெட்டுவதற்கான உரிமம் உள்ளவர்களுக்கு பதிலாக இந்த வருடம் ஆடுகள் வெட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டதற்கு பக்தர்கள் மற்றும் கோயில் அறங்காவலர் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பழைய நடைமுறையையே அமல்படுத்த வேண்டுமென்று அமைச்சர் பெரியகருப்பன், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் கிராம மக்கள் மற்றும் அறங்காவலர் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.