/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்தூரில் நெல் மகசூல் குறைந்தது:மழை இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றம்
/
திருப்புத்தூரில் நெல் மகசூல் குறைந்தது:மழை இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றம்
திருப்புத்தூரில் நெல் மகசூல் குறைந்தது:மழை இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றம்
திருப்புத்தூரில் நெல் மகசூல் குறைந்தது:மழை இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : பிப் 10, 2024 05:01 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் வட்டாரத்தில் மழை ஏமாற்றியதால் நெல் சாகுபடியில் மகசூல் வெகுவாக குறைந்துள்ளது.
திருப்புத்துார் வட்டாரத்தில் கடந்த ஆண்டு 7750 ஏக்கரில் நெல் சாகுபடி நடந்தது. நல்ல மகசூலையும் பெற்றது. இந்த ஆண்டு தாமதமான மழை, போதிய அளவில் பெய்யாதது, மணிமுத்தாறு, பாலாற்றில் நீர் வரத்து இல்லாதது போன்ற காரணங்களால் நெல்சாகுபடி 5 ஆயிரம் ஏக்கராக குறைந்தது.
தற்போது 70 சதவீதம் அறுவடை நடந்துள்ள நிலையில் கதிரில் பால் பிடிக்கும் நிலையில் போதிய மழை இல்லாததால் நெல் மகசூலும் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. வைக்கோலுக்காக அறுவடை செய்யும் நிலை காணப்படுகிறது. எம்.புதூர், வைரவன்பட்டி, தானிப்பட்டி, வாணியங்காடு போன்ற பகுதிகளில் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எம்.புதுார் முத்துலெட்சுமி கூறுகையில், 2 ஏக்கர் சாகுபடிக்கு 60 மூடை கிடைக்க வேண்டும். 20 மூடை நெல் தான் கிடைத்தது. செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. 3 முறை உரம் போட்டது, பூச்சி மருந்து அடித்தது.களையெடுத்தது என ரூ 40 ஆயிரம் செலவாச்சு. இப்போ நெல் மூடை 1500க்கு கூட போகலை. சாப்பாட்டுக்கு வீட்டில வைக்க வேண்டியது தான்' என்கிறார்.
வேளாண்துறையினர் கூறுகையில், திருப்புத்துார், திருக்கோஷ்டியூர் பிர்காக்களில் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது.
இப்பகுதியில் கிணறு,போர்வெல் வசதி உள்ளவர்கள் சாகுபடி செய்தும் மகசூல் குறைந்துள்ளது. நெற்குப்பை, இளையாத்தங்குடி பகுதியில் மகசூல் இழப்பு ஏற்படவில்லை. ' என்றார்.