
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே தி.புதுார் மஞ்சுவிரட்டு மைதானத்தில் லயன்ஸ் சங்கம், அம்மையப்பர் குழுமம், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் சார்பில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் முன்னிலை வகித்தார். அம்மையப்பர் குழும போக்குவரத்து மேலாளர் மதிக்குமார், லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் செல்வம், முதல்நிலை ஆளுநர் ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் ஆரோக்கியம் லயன்ஸ் சங்க தலைவர் ரமேஷ்கண்ணன், செயலாளர் துரைப்பாண்டி, பொருளாளர் செந்தில்குமார், மண்டலத் தலைவர் முத்துக் கண்ணன், வட்டாரத் தலைவர் முத்துராஜா, திட்ட இயக்குநர்கள் முத்துப்பாண்டியன், பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

