ADDED : அக் 29, 2025 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். மாணவர்கள் விடுமுறை எடுப்பதை தவிர்க்குமாறும், தேர்வு நேரம் மட்டுமில்லாமல் மற்ற அனைத்து நாட்களிலும் வீடுகளில் பாடங்களை படிக்க மாணவர்களை வலியுறுத்துமாறும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் கலந்துகொண்டனர்.

