/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் - காரைக்குடிக்கு மாணவர்களுக்கு சிறப்பு பஸ் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஆக 19, 2025 11:45 PM
திருப்புத்துார் : திருப்புத்துாரிலிருந்து மாணவ, மாணவிகள் வசதிக்காக காலை,மாலை சிறப்பு அரசு பஸ்களை இயக்க பெற்றோர்கள் கோரியுள்ளனர். காரைக்குடியில் அழகப்பா பல்கலை., அரசு,தனியார் கல்லூரிகள், பள்ளிகள், தனியார் பயிற்சி நிலையங்கள் உள்ளன.
இதனால் திருப்புத்துார், சிங்கம்புணரி பகுதியிலிருந்து நூற்றுக்கணக்காக மாணவ, மாணவியர்கள் தினசரி காரைக்குடி செல்கின்றனர். அதில் பெரும்பாலோனோர் பஸ் வசதியையே நம்பி உள்ளனர். ஆனால் அதற்கேற்ப பஸ் வசதி இல்லை. காலை நேரத்தில் வெளியூர்களிலிருந்து திருப்புத்துார் வழியாக காரைக்குடி செல்லும் பஸ்களில் இடமின்றி மாணவியர் தவிக்கின்றனர். பல நேரங்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் செல்கின்றனர். இதனால் காலை,மாலை நேரங்களில் மட்டும் திருப்புத்துார் காரைக்குடி பல்கலை வரை மாணவர்களுக்கு மட்டுமான சிறப்பு பஸ் வசதி ஏற்படுத்த கோரியுள்ளனர்.